உழைப்பே உயர்வு--போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான்

சிலந்திவலையில் உறங்கிட முடியாது.
எறும்புகள் கூட்டம் தன்னைக் காட்டிலும்
பன்மடங்கான பருக்கைகளை தோளில்
சுமந்து வாழிடம் கொண்டு செல்கிறது....,
***

உமிழும் எச்சை உமிழ்ந்தவன் என்றும்
எண்ணிப் பார்த்த சரித்திரங்கள் இங்கில்லை.
உடலின் வியர்வையை கூட நுகர்ந்து
மூக்கை பொத்திக் கொள்ளும் மானிடக்கூட்டம்
சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்
உடலை உயிராக என்றும் மதித்ததில்லை.
***

ஜாதகம் மேல் நம்பிக்கையை முடக்கி
பொன்னும் பொருளும் நிறைந்த செல்வன்
மனையாள் கருவில் ஆணுக்கு பதிலாக
பெண்ணாக வந்த விந்தின் உயிரை கள்ளிப்பாலில்
உறங்க வைக்கிறாள்.அதே வீட்டின் துணிகளை
சலவை செய்யும் ஏழை விட்டு பெண்மணி
ஒரே கருவில் ஆணும் பெண்ணும் பிறந்ததை
அன்பினால் மாரூட்டி தாலாட்டு பாடுகிறாள்.
இன்னும் நான்கு வீடுகள் சலவைக்காய்
ஏறி இறங்கினால் போதுமென்று....
***

தூண்களில்லாமல் எழுப்பப்பட்ட ஆகாயம்
இறைவனின் உழைப்பின் திறனை காட்டியது,
அந்த ஆகாயத்தின் கோள்களின் சுழச்சியில்
இருப்பிடம் தேடி பயணிக்கும் மனிதனின் ஆற்றல்
உழைப்பின் விந்தையை உணர்த்தியது.
***

உழைப்பவன் தோளிருந்து சிந்திய வியர்வைதான்
மண்ணின் நிலத்தை உப்பின் கடலாக மாற்றியது.
அவன் கண்விழித்து கனாக்கண்ட பசியின் ஏக்கம்தான்
முழுநேர பகலையும் பாதி இரவாக பங்குபோட்டுக் கொண்டது
***

பூக்களை நோகாமல் பறித்து ஊசியில் நூலை
கோர்த்து செய்திட்ட பூமாலைகள் பெண்களின்
கூந்தலில் உதிராமல் இருப்பது கலாசாரத்தின் அடையாளம்
அதை பாதுகாக்க ஏழையின் வயிற்றில் பசியின்
சிலுவைகள் மண்டியிட்டு அழுகிறது.
***

கொள்ளையனுக்கு கஷ்டத்தின் முகவரி தெரியாது.
தினந்தினம் கைகளையும் கால்களையும் வருந்திக்
கொண்டு நிற்பவனின் முகவரியே கஷ்டம் என்பது தான்.
***

விறகினை வெட்டி கண்ணீரை சிந்தி பசியின்
வாழ்க்கையோடு தள்ளாடும் முதிர்ந்த கால்களுக்கு
செருப்புகள் கிடையாது;உருகி வெடித்த பாதங்கள்
அந்த செருப்பைக் காட்டிலும் வலிமை அவர்களுக்கு..,
பல தடவைகள் நான் அழுதிருக்கிறேன் என்
சொந்தத்திலும் அவர்கள் இருப்பதால்.,-சில நிமிடங்கள்
நீங்களும் கண்ணீர் சிந்துவீர் உங்களோடும் வசிப்பதால்
***

சேவை செய்தவர்களுக்கு மண்ணில் கோடிக்கணக்கான
சிலைகள் உண்டு..ஆனால் மண்ணோடும் நிழலோடும்
ஓயாது ஓடும் உழைப்பவன் தேகத்திற்கு கந்தல் ஆடைகளே
அடையலாம்..-உலகில் மிக உயரம் மனிதனின் சிறு
இதயம் என்பார்கள்;அந்த இதயங்கள் அறிகிறது உழைப்பே உயர்வென்று...
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Apr-16, 1:11 am)
பார்வை : 1916

மேலே