தினம் ஒரு காதல் தாலாட்டு - இயற்கை 1 = 85
(தொகையறா )
அம்மா மாம்பழம் வாங்கலையோ மாம்பழம் !
அம்மா மாம்பழம் வாங்கலையோ மாம்பழம் !
மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம் !
மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம் !
(பல்லவி)
அம்மா இது - முந்தாநாளு பழுத்த மாம்பழம்
அய்யா இது – நேத்துதான் பறித்த மாம்பழம்
இன்னிக்குதான் சந்தைக்கு வந்த மாம்பழம்
அண்ணன் அண்ணிக்கு பிடித்த மாம்பழம்
பண்ணையிலே விளைச்ச மாம்பழம்
சென்னையிலே விக்கும் மாம்பழம்
திண்ணையிலே குவிச்ச மாம்பழம்
தொன்னையிலே வாங்கும் மாம்பழம்
பல ரகத்தில் கிடைக்கும் மாம்பழம்
பழ ரசத்தில் அசத்தும் மாம்பழம்
பட்டிக்காட்டில் முளைக்கும் மாம்பழம்
பிளைட்டில், - பாரீனுக்கு பறக்கும் மாம்பழம் !
சித்திரையில் சீரெடுக்கும் மாம்பழம்
ஆடியிலே ஆள்பறக்கும் மாம்பழம்
சீர்வரிசையில் முந்தி நிற்கும் மாம்பழம்
சீமந்தப் பெண்ணுக்கு வாந்தி நிறுத்தும் மாம்பழம்
முக்கனியில் முதலிடம் மாம்பழம்
முத்தான சத்துணவு மாம்பழம் !
அக்கரையா வாங்கிச்செல்லும் மாம்பழம்
மக்கள் வக்கனையா உண்டு மகிழும் மாம்பழம் !
முன்கோபி முருகனுக்கு - ஒளவைப் பாட்டி
ஞானம் தந்த மாம்பழம்!
பட்டாபி இராமனுக்கு - சீதா பிராட்டி
தானம் தந்த மாம்பழம் !
சீரடி வாசனுக்கு ரொம்பப் பிடித்த மாம்பழம் – அவர்
மார்வாடி தாமுவுக்கு பிள்ளை வரம் தந்த மாம்பழம் !
தர்மபுரி சுற்றுவட்ட விவசாயிகளின் ஜீவாதார மாம்பழம் !
சேலம் மாநகர் செழிப்புக்கு முக்கிய காரணமான மாம்பழம் !
மல்கோவா மாம்பழம்; - எல்லோர் மனம் மகிழும் மாம்பழம் !
அல்போன்சா மாம்பழம்; - ஆளைக்கொள்ளையிடும் மாம்பழம் !
கிளிமூக்கு மாம்பழம்; - காதலியை கிரங்கடிக்கும் மாம்பழம் !
பங்குனிபல்லி மாம்பழம்; - பங்காளி வம்புத்தீர்க்கும் மாம்பழம்
ருமானி மாம்பழம்; - ஒரே சீரான மாம்பழம்;
விமானப் பணிப்பெண்ணாய் குனிகின்ற மாம்பழம்
திருகுணி மாம்பழம்; - திருவேங்கடான் மாம்பழம்
திருமதிகள் விரும்பிவுண்ணும் தரமான மாம்பழம்
செந்தூரன் மாம்பழம்; - செக்கச்சிவந்த மாம்பழம்
வந்தாரை கவர்ந்திழுக்கும் நட்சத்திர மாம்பழம் !
மல்லிகா மாம்பழம்; - அழகில் ஆரணங்கு மாம்பழம்
நெல்லிக்கா குணம் கொண்ட நோய் எதிர்ப்பு மாம்பழம்
ராஸ்புரி மாம்பழம்; - ராசியான மாம்பழம்
ராஜாக்கள் உலாவரும் ராஜஸ்த்தானி மாம்பழம்
தாசரி மாம்பழம்; - தரமான மாம்பழம்
ஆச்சாரி ராகவேந்தர் வரம்பெற்ற மாம்பழம்
பாதாமி மாம்பழம்; - பழங்கால மாம்பழம்
ஆதாம் ஏவாள் காதலுக்கு தூதுப்போன மாம்பழம்
கேசர் மாம்பழம்; - சங்ககால மாம்பழம்
வாசன், வாசுகிக்கு காம கிக்குஏத்தும் மாம்பழம்.