குழந்தை தொழிலாளர்

கூரு பத்துரூபா
கூட்டிவச்சி வித்திடுவா
யாரு கண்ணு பட்டிருச்சோ
நோவுகண்டு படுத்துப்புட்டா

நேத்தைக்கு கூலியில்லைன்னு
கடனுக்கு வாங்கிக்குடிச்சு
கவுந்தடிச்சி படுத்துப்புட்டாரு
என்னபெத்த மகராசன்

இன்னும் ரெண்டு கூறு
வித்துப்புட்டா சேர்த்துடுவேன்
கொஞ்சம் காசு

ஆனாலும் யோசனை ஒன்னுருக்கு
சேர்த்த பணத்த
சிட்டக்காரனுக்கு கொடுத்துடவா
ஸ்கூல் பீசுக்கு கட்டிறவா

கூரு பத்துரூபா....

எழுதியவர் : charlie kirubakaran (28-Apr-16, 6:31 pm)
பார்வை : 164

மேலே