உழைப்பின் பயன் தர்மமே

கைநிறைய பணம்
மனம் நிறைய பயம்
உடல் வருந்த உழைப்பு
ஆனாலும் இல்லை நிம்மதி

வெயிலோ மழையோ
உறக்கமோ உணவோ
பாராமல் நித்தம் நித்தம்
வியர்வை சிந்தி உழைத்தும்
அமைதி என்றும் இல்லையே

வறுமை பசி இல்லை என்றும்
வாட்டசாட்டம் கொண்டு
வளைந்து கொடுத்தும் வாழ்வில்
நேர்மையுடன் வாழ்ந்தும்
என்றும் என்றும் அர்த்தமில்லையே

தர்மம் செய்து பார்.......
எதற்கு இந்த பதட்டம் என்றும்
வேண்டாம் இந்த ஆசை என்றும்
போதும் என்ற அளவு கொண்டு
பொன் உலகில் வாழ்ந்திடுவாய்

நாட்டில் பஞ்சம் இன்றி வாழ்வதற்கு
தர்மம் செய்து வாழ்ந்து பார்
தரணியில் நீ சிறக்க
தலைவனாய் கொண்டாடும்
தங்கத் திருமகனாய் உயர்ந்திடுவாய்

தலைமகனே வாழ்க என்றும்
தர்மமே தலைகாக்கும் என்றும்
பார் புகழ வாழ்ந்திடுவாய்
உழைக்கும் உன் கரங்களாலே
ஊரெங்கும் உவந்தளிப்பாய்
உள்ளம் எங்கும் உயர்ந்து நிற்பாய்

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Apr-16, 2:44 pm)
பார்வை : 451

மேலே