இப்படியும் காதல் இருக்கும்--கயல்விழி

இப்படியும் காதல் இருக்கும்

சிரிக்காதே
சுத்தமா பிடிக்கல
உதட்டை பிதுக்காதே
உனக்கு
பொருந்தவே இல்லை

சிவப்பு சாரி கட்டாத
காளி மாதிரி
இருக்க
வெள்ளை சுடிதார் வேணாம்
கன்பார்ம்
மோஹினி தான்
மாடர்ன் டிரஸ்
உனக்கு செட் ஆகாது

கிராமத்து டிரஸ்
சிச்சீ
செட்டே ஆகாது
ஓவரா பேசாத
கேட்க சகிக்கல
முத்தம் கேக்காத
வாமிட் வருது

கோவப்படாத
கேவலமா இருக்கு
முரைக்காத
சிரிக்க முடியல

லூஸ் கேர் விடாத
பிச்சக்காரி மாதிரி
இருக்கிற
கண்ணாடிய பார்க்காத
பயந்திட போற.

போடா நாயே

நான் போறேன்

போடி நீ போ
நீ போன பின்
என் உடல் இந்த
இடத்தில்
நிச்சயம்
மண்ணோடு
மக்கிப்போய் விடும்.

உயிர் பிரிந்த பின் உடலுக்கென்ன
வேலை..!

எழுதியவர் : கயல்விழி (30-Mar-16, 10:02 pm)
பார்வை : 891

மேலே