எங்கே போகிறோம்?
ஏர் உழுதவனும்,
ஏற்றம் இறைத்தவனும்,
எங்கோ தொலை தூரத்தில்,..
ஏதோ ஒரு கல்குவாரியில்
ஏதோ ஒரு செங்கல் சூளையில்
ஏதோ ஒரு பஞ்சு ஆலையில்
ஏதோ ஒரு வெடிமருந்து கிடங்கில்,
ஏதோ ஒரு வேலையில்...
ஏலேலோ...பாடி
ஏற்றம் இறைத்த காலம்போய்
ஆழ தூர் வாரியும்
ஆழாக்கு தண்ணியில்ல..!
முப்பாட்டன் பார்த்த நிலம்
முப்போகம் விளைஞ்ச நிலம்
இப்போ....
தண்ணியில்லா வயலுக்குள்ள
தவளை சத்தம் போடுது.
கணினியும்
காசிரைத்த கல்வியும்
கனவுலகக்கன்றி...
பசித்தவயிறுக்கு உணவாகுமோ?!!
அரசியல்வாதிகளிடமும்
அச்சிட்ட காகிதயுள்ளோரிடமும்
அடிமையாகிப் போனது
விளை நிலமட்டுமல்ல..
விவசாயியும்தான்.!
இதையும் தாண்டி...
வானத்தை நோக்கியபடியே
வசந்தம் வரும் நம்பிக்கையில்
வாழ்ந்துகொண்டிருக்கிறான்
எந் நாட்டு விவசாயி!