தலைமுறை

முப்பாட்டன் வழியில் தாத்தா,
தாத்தா வழியில் அப்பா
அப்பா வழியில் நான்,
என் வழியில் என் மகனில்லை!
நீ நீயாக இரு,,
நான் நானாக இருக்கிறேன்,.
சொல்லாமல் சொல்லும்
பிள்ளைகள்.
நேர்மை நாணயம்
கணினியின் வரவால் அன்னியப்பட்டது,
உறவுகளின் இடைவெளி
நீட்டிக்கப்பட்டது,
தட்டச்சு எழுத்துக்களால் மட்டுமே,
உறவும் நட்பும் இன்னும் உயிர் வாழ்கிறது...!!