முபாலு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முபாலு
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி :  21-Dec-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2010
பார்த்தவர்கள்:  286
புள்ளி:  111

என்னைப் பற்றி...

வாழ்க வளமுடன் .....
சாதாரணமானவன் ....
உங்களில் ..ஒருவனாக என்னை நானே நினைத்துக் கொள்பவன் ..!தமிழின் மீது ஆசை..,அதனால் முடிந்தவரை பிறமொழி சேராமல் தமிழில் எழுதப் பிடிக்கும்,வாழும் வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் உண்டோ,அத்தனையும் கண்டு,கடந்து வந்துகொண்டு இருப்பவன்.ஏதோ எழுதுகிறேன்..அதை கவிதை என்று நான் சொல்ல விரும்பவில்லை.
தற்போது குவைத்தில். வேலை செய்து வருகிறேன்

என் படைப்புகள்
முபாலு செய்திகள்
முபாலு - எண்ணம் (public)
03-Aug-2020 11:45 pm

செவலக்காளை ரெண்டு பூட்டி.
***********************************
ஆண்:
வாடாமல்லி சேலைகட்டி 
வரப்புமேலே போற புள்ள,
செவலக்காளை ரெண்டு பூட்டி..நாளை,
சந்தைக்கு நானும் போறேன்..
வேண்டியது நீயும் கேளு
விருப்பத்துடன் வாங்கி வாரேன்!

பெண்:
வெள்ளை வேட்டியிலே 
வீரனாட்டம் நிக்கிறவரே,
விருப்பந்தான் சொல்லி விட,!

நீ முறை மாமனும் இல்ல
முன்னே பின்னே பார்த்ததும் இல்ல,
வினை வந்து சேருமுன்னு
அச்சம் வந்து சேருதய்யா!

ஆண்:
கண்டாங்கி சேலை கட்டி,
கனகாம்பரம் பூவும் வச்சு,
கண்ணுக்கு அழகாத்தான் தெரியுறயே,
கண்ணால ஆசையத்தான் சொல்லுறியே,
எம் மனசுக்குள்ள பூவாய் பூக்குறியே,

ஆவணி வந்தாலே அச்சாரம் போடுறேன்,
அக்கம் பக்கம் வாயைத்தான் மூடுறேன் .!

பெண்:
பேசிப் பேசி மயக்குறியே..
பெண் மனதைக் கெடுக்குறியே,
பக்கம் வந்து பேசத்தானே
வெட்கம் வந்து தடுக்குதைய்யா.
பாக்கு வெத்தலை மாத்தி விடு
பருசமும் போட்டு விடு,
ஊருலகம் என்ன சொன்னாலென்ன..
உன்கூட நான் வாரேன்!

ஆண்:
மனசுக்குள்ள உன்னை நினைச்சாச்சு,
மனைவி நீதான்னு விதச்சாச்சு,
விரும்பியதை வாங்கி வாரேன்
விருப்பத்துடன் பெற்றுக் கொள்ளடி.
*************************










மேலும்

முபாலு - எண்ணம் (public)
03-Aug-2020 11:43 pm

புதிய கண்ணகி
********************
கற்பு கடைச்சரக்காய் மாறிப் போச்சு,
கவலையில்லை கண்ணகிக்கு,
நம்பிக்கையில் தீ வைத்து
நாளொரு மேனியாக
நல்லவன் போல் வேசம் போடுகிறானே..
அதுதான் கோபம்.!

துரோகத்தின் உச்சத்தில்
தீப்பற்றி எரிகிறது உடம்பெங்கும்,
ஆணும் பெண்ணும் செய்த தவறுக்கு,
பெண் மட்டும் பலியாவது 
யார் வகுத்த நியதி,
நீதி கேட்டுப் போராடினால்
ஒரு தடவை போன கற்பு
ஓராயிரம் தடவை போகும் 
 ஊடகங்களால்,

அவளே முடிவெடுத்தாள்
அவளே தண்டனை கொடுத்தாள்,
அனுபவித்தவளுக்கே தெரியும் வலியின் கொடுமை!

காமத்துடன் வந்தவனை
மோகத்துடன்  பார்த்தாள்,
அணைத்தாள் அணைத்தான்,
ஆடைகளற்ற நேரத்தில் 
அறுத்தெடுத்தாள் ஆணுறுப்பை,!

கண்ணகியாய் வேண்டும் என்பவர்கள்
இராமர்களாய் இருப்பதில்லை,
மாதவியாக ஆக்கி விட்ட சமூகத்தில்,
கண்ணகி வேடங்கள்
இரவெங்கும் அரங்கேறுகிறது வெளிச்சத்தில்!
***********************************

மேலும்

முபாலு - எண்ணம் (public)
01-Aug-2020 12:10 am



ஊரோரம் காத்திருக்கேன்!
****************************
ஊரோரம் காத்திருக்கேன் உனக்காகக் கண்ணே,
ஓடோடி வந்திடு எனக்காகப் பெண்ணே,
நிலவு காத்திருக்கு நமக்காகக் கண்ணே,
பொழுது விடியுமுன் வருவாயே பெண்ணே!

நீ வருவாயென பூக்கள் காத்திருக்கு,
வரும் வழியெங்கும் நட்சத்திரம் பூத்திருக்கு,
உன் முகம் காணவே நிலவும் காத்திருக்கு,
ஆதவன் வருமுன்னே அவசரமாய் வந்திடு !

மேகம் வந்து பஞ்சனை போடுது,
மோகம் வந்து தட்டி எழுப்புது,
வேகம் கொண்டே நேரம் ஓடுது,
தாகம் தீர்க்கவே விரைவாய்வா கண்ணே!

தனிமையிலே தவிக்கிறேன் ஏக்கத்திலே துடிக்கிறேன்,
புரியாமலே புலம்புறேன் வரும்வழியைப் பார்க்குறேன்,
இமை மூடினால் வெளிச்சமாய் நீயிருக்க,
நித்திரையின்றி தவிக்கிறேன் நினைவாலே வாடுறேன்,

ஊருசனம் தூங்கியாச்சு சாமக்கோழியும் கூவியாச்சு,
கூவும் குயிலும் சோடியுடன் சேர்ந்தாச்சு,
காலையிலே காராப்பசு கத்தும்  முன்னே,
காக்க வைக்காமல் காதலுடன் வா கண்ணே!
*************

மேலும்

முபாலு - எண்ணம் (public)
01-Aug-2020 12:06 am


கடலலைகளின் நினைவலைகள்.
***************************
வயது போனாலும் அந்த நாள்,/
நினைவு தோன்றுகையில் மனதுக்குள்ளே மகிழ்ச்சி/
மத்தாப்பு போல பூவாய் விரிகிறது/

பசுமை நிறைந்த வயலின் ஓரம்/
பாவை நீயும் பதுமையாய் அமர்ந்திருக்க/
பறந்த வண்டொன்று  உன்னிதழில் தேன்குடிக்க/
மெல்லிய இதழும் சிவந்து போனதே/

கைகளால் பட்டென்று தட்டி விட்டு/
கண்களால் நீ எனைப் பார்த்ததின் பொருள்/
'உனக்காக உள்ளதை வண்டு உண்ணலாமோ'
எனக் கேளாமல் கேட்பதாய் இருந்ததே../

கருமேகம் வானில் வட்டமிட..மெதுவாய்/
குளிர் தென்றல் நம்மைச் சுற்றிட/
குயிலொன்று குரலோசை எழுப்பிட..நம்மின்/
கண்கள் சந்தித்து தலைசாய்த்துக் கொண்டதே/

மனதின்  எண்ணங்கள் இருவருக்கும் ஒன்றாய்/
மலர்கிறது மாறாமல் மனதின் இடையே/
துடிக்கும் இதயச் சப்தங்களுக்கு நடுவே/
நம் கரங்கள் பற்றிக் கொள்கின்றனவே./

நீ யார் என்பதை நான் மறந்து/
நான் யார் என்பதை நீயும் மறந்து/
இருக்கும் இடம் அறவே மறந்து../
என்னுள் நீயாக உன்னுள் நானாக/
மாறத் துடித்த அந்த நேரத்தில்/
மின்னல் வெட்டியதே இடியும் இடித்ததே/
கூடவே மழையும் வந்து சேர/
வெப்பமான மேனி நனைந்து குளிர்ந்ததே/

வெட்கத்தில் உன் முகம் சிவக்க./
புன்முறுவல் என் முகத்தில் இழையோட../
நனையாது இருக்க குடை பிடிக்க/
தோள் மீது சாய்ந்த நம் காதல்/
முத்தங்களின் சப்தத்தில் துவளாமல் தொடர்ந்ததே /

*****************

மேலும்

முபாலு - முபாலு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2018 9:27 am

மனிதம்.
******"**
இரக்க குணமறந்து சேர்த்த பொருளெல்லாம்,
ஆழிப் பேரலை கொண்டு சென்றும்,
ஆசை அடங்கவில்லையே மனிதன் கொண்ட,
அகந்தை அழியவில்லையே அழிவு தெரியலையே!

நீயே உனக்கு சொந்தமானவன் அல்ல,
உன்னில் உள்ளவை அனைத்தும் பிறர்க்கே,
மனிதத்தை மனித நேயத்தை வெளிப்படுத்து,
மரணிக்குமுன் உதவிடு மனிதத்தைக் காத்திடு,

பிறப்பின் பயன் மறந்து  வாழ்ந்து,
இறப்பின் முடிவில் கண்ணீரில் கரைவதேன்,
பிறரைக் கெடுத்து வாழாமல் இருப்பதை,
பிறர்க்கு கொடுத்து வாழ்ந்து பார்.
************************

மேலும்

முபாலு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2016 12:30 pm

ஜன்னலை திறக்க முயன்றேன்,
முடியவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஆணிகளால் இறுக்கப்பட்டு...!

குரல் கொடுத்தேன்..
"யார் செய்த வேலையிது?"
"அடுத்த வீட்டு ஜன்னலை
என்னால் மூட முடியாதே"
சகதர்மினியின் குரல்.
அமைதியானேன்.

'அடி போடி
இருக்கவே இருக்கு
மொட்டைமாடி.
நிலா வராமலா போகும்!'

மேலும்

அடடா அழகு நிலா 09-Jul-2016 2:11 pm
ஹா..ஹா.. இது வான் நிலா அல்ல..! பாவை நிலா. நன்றி. . 09-Jul-2016 1:30 pm
வானுக்கு சொந்தமான நிலவென்றால்... நிச்சயம் வரும்! 09-Jul-2016 12:46 pm
முபாலு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2016 11:21 am

வெட்டி எறிகிறார்கள்
மனதையும்
மரத்தையும்!

வெறிச்சோடி கிடக்கிறது
ஊட்டி வளர்த்த காதலும்- நீர்
ஊற்றி வளர்த்த மரமும்!

வேர்களையாவது
விட்டு வையுங்கள்,
வருங்கால
வாழ்க்கைக்கும்
வனத்திற்கும்!

மேலும்

உணர்ந்தால் நலமே! 09-Jul-2016 2:05 pm
நிச்சியம்.. நன்றி . 09-Jul-2016 12:55 pm
நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற நல்ல கருத்துகளை! இல்லையேல் நாளடைவில் மறந்திடக்கூடும். 09-Jul-2016 11:32 am
முபாலு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2016 11:31 am

பட்டாசு
வெடிக்கும்போதெல்லாம்
மனித அலறல்களும்
சிதைந்த சதைகளுமே,
ஒலியும் ஒளியுமாக
என் கண்களில்...!

மேலும்

எண்ணற்ற உயிர்களை காவு வாங்கிய கண்ணீர் அஞ்சலி 09-Jul-2016 2:09 pm
சிலமணித்துளிகள் சந்தோசத்திற்க்காக...பல நேரம் பல உயிர்கள் பலியாகின்றன. நன்றி. 09-Jul-2016 12:54 pm
மனித நேயமற்ற செயல்கள் யாவும் வன்முறையைத்தான் உண்டு பண்ணும்! இதயத்தில் சிறிது ஈரம் இருந்தால் காதல் மலரும் வன்மம் நமத்துப் போகும்! அப்புறம் என்ன யுத்த களத்தில் முத்தம் சத்தம்தான் ஒலிக்கும். 09-Jul-2016 11:38 am
முபாலு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2016 11:50 am

உனை,
ஆளாளுக்கு தடவிக்கொடுப்பார்கள்,
ஆசைதீர தின்னக்கொடுப்பார்கள்,
புதுத்துணி சாத்தி
நெற்றியில் பொட்டும் வைப்பார்கள்.

நேர்த்திக்கடன் என
ஊரே பார்த்திருக்க,
குலசாமிக்கு முன் நிறுத்தி
காதிலும் மூக்கிலும் ஏறுமளவுக்கு
மஞ்சத்தண்ணி ஊத்துவார்கள்,

குலசாமி பேர்சொல்லி
உனைத்திங்க
ஒரு கூட்டம் காத்திருக்கு,

உன்னுயிர் உனக்கு வேணுமெனில்,
தயவு செய்து
தலையை மட்டும் குலுக்காதே..!

மேலும்

சைவமும் அசைவத்தால் முற்றுப் பெறுகிறது 09-Jul-2016 2:10 pm
ஹா..ஹா..உண்மை.நன்றி. 09-Jul-2016 12:51 pm
மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பவர்கள்தான் தலையசைத்து வாழ்வார்கள்... 09-Jul-2016 12:00 pm
முபாலு - முபாலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2015 9:58 pm

காதல் காதல் எனக் கூவி
காமத்திலே குளிக்கின்றனர்,
காமமே காதல்...
காமம் இல்லையெனில்
காதல் கருவிலையே
கலைந்திடுமே...!

காமமில்லா காதல்
எழுதப்படாத
வெற்றுத்தாள்!

காமத்தின் வாசலில் நுழைந்த
காதல் வார்த்தைகள்
மணம் வீசும் பூக்களால்
அலங்கரிக்கப் படுகிறது!

காதலென்ற வட்டத்துக்கு
காமமே புள்ளியாகிறது!

காதல் மத்தளம் தட்டும் போது
காமம் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறது!

காதலின் நிழலாக காமம்,
தொடர்ந்து கொண்டே இருக்கிறது,!

காமம்
உனக்குள்
எனக்குள்
பூட்டிய அறைக்குள்
சுழன்று கொண்டிருக்கும்
தீ...போல!

காமமில்லா காதலன்
பொய்யன்.!

அலங்கரிப்பதும்,
ஆசை ஆசையாய் பேசுவதும்,
கை

மேலும்

வணக்கம் நண்பரே, தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,ஊக்குவிப்புக்கும் வாழ்துக்களும்,நன்றிகளும்! வாழ்க வளமுடன்! 28-Aug-2015 12:56 pm
நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2015 10:13 am
இனிய வணக்கம் அன்பு நண்பருக்கு, காதல் புனிதமானது..மறுக்க மனமில்லை. அதே வேளையில்.இப்போது உள்ள காதல்களில்.... காதல்...கரையேற்றப்பட்டு விட்டது...! பச்சையாக சொன்னால் கட்டிலுக்கு அழைத்துச் செல்லவே இங்கே காதல் செய்யப் படுகிறது.! காதலும்..வியாபாரம் ஆகிவிட்டதோ ..என் பல நிகழ்வுகளை காணும் போது மனதில் தோன்றுவதுண்டு! இருப்பினும்... காதலின் உள்ளார்ந்த அன்பை உணர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! உங்கள் வாசிப்புக்கும்,கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்! 28-Aug-2015 9:03 am
உண்மைதான்... சில மானசீக காதலும் இருக்கத்தான் செய்கிறது... ஆனால் இந்த காலத்தில் அதை பார்ப்பது அரிதாகி விட்டது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 1:36 am
முபாலு - முபாலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 11:31 pm

கனவுகளை புதைத்து விட்டு
நினைவுகளை சுமந்து
முழக் கயிற்றில் உயிர் நீக்கப்போகும்
என் தோழனே....எந் நாட்டு இளைஞனே...,

முயற்சித்துப் பாரடா...
சமுத்திரம் முழங்காலளவுடா..,
வெற்றிடம் எங்கும் இல்லையடா
வெறும் கை முழம்போடாதுடா...,

உழைப்பே உண்ணதமடா...
உலகம் உனை மதிக்குமடா...,
வெற்றி பெற்றவரெல்லாம்
வீழ்ந்து எழுந்தவர்தானடா...,

இயற்கையை நேசி,
காற்றுடன் பேசு
நீருடன் விளையாடு
நெருப்போடு பயப்படு
மண்ணோடு பாசம் வை..
விண்ணோடு சேர்ந்து
மனசை விசாலமாக்கு,

பிறப்பது உண்மையெனில்
இறப்பதும் உண்மையடா..,
வாழ்வது ஒரு முறைதானடா
வாழ்ந்துதான் பாரேண்டா..!
என் தோழனே...
எந் நாட்டு இளைஞனே...!

மேலும்

மிக்க மகிழ்ச்சி....உங்களின் கருத்துக்கு!வாழ்க வளமுடன்! 30-May-2015 7:31 pm
மிக்க மகிழ்ச்சி நண்பரே....! 30-May-2015 7:30 pm
மிக நன்று 30-May-2015 12:37 am
இயற்கையை நேசி, காற்றுடன் பேசு நீருடன் விளையாடு நெருப்போடு பயப்படு மண்ணோடு பாசம் வை.. விண்ணோடு சேர்ந்து மனசை விசாலமாக்கு, மிக அருமையான வருடல்கள் மனத்தை தொட்ட வரிகள் 29-May-2015 11:34 pm
முபாலு - முபாலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2015 12:24 am

அன்பு மகளே...
என் செல்லமே...
உன்னில் என்னைப் பார்க்கிறனேடி.!

நீ பிறந்ததும்
உன் ஶசிரிப்பே என் சிரிப்பாக.,
உன் சோகமே என் சோகமாக
மாறிப்போனதடி...!

என் கண்ணே...
பட்ட வலியும் வேதனையும்
உன் பொக்கை வாய் சிரிப்புக்குள்
ஓடி ஒளிந்து கொண்டதடி.!

என் மணியே ...
என் மார்பில் பால் அறுந்தும்போது
ஓராயிரம் பூ
உள்ளத்தில் பூத்ததடி.
ஊறும் மறந்ததடி,
உலகமும் மறந்ததடி..!
உற்றவனையும் மறந்து
என்னை நானே மறந்தேனடி...!

பொண்ணா பொறந்த பொறப்புக்கு
வேறென்ன வேண்டும்...?

கொண்டவனின் சுகம்
ஒரு காலம்தானடி,
பெற்றவளின் சுகம்
பிள்ளைகளின் நலம்தானடி...!
*********************************************

மேலும்

அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் .தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி . 27-Feb-2015 4:38 pm
கவி மிகவும் அருமை...! 27-Feb-2015 3:59 pm
மிக்க மகிழ்ச்சி நண்பரே... 27-Feb-2015 2:54 pm
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி . 27-Feb-2015 2:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
மேலே