காதல் இது காதலர்களுக்கு மட்டும்

காதல் காதல் எனக் கூவி
காமத்திலே குளிக்கின்றனர்,
காமமே காதல்...
காமம் இல்லையெனில்
காதல் கருவிலையே
கலைந்திடுமே...!

காமமில்லா காதல்
எழுதப்படாத
வெற்றுத்தாள்!

காமத்தின் வாசலில் நுழைந்த
காதல் வார்த்தைகள்
மணம் வீசும் பூக்களால்
அலங்கரிக்கப் படுகிறது!

காதலென்ற வட்டத்துக்கு
காமமே புள்ளியாகிறது!

காதல் மத்தளம் தட்டும் போது
காமம் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறது!

காதலின் நிழலாக காமம்,
தொடர்ந்து கொண்டே இருக்கிறது,!

காமம்
உனக்குள்
எனக்குள்
பூட்டிய அறைக்குள்
சுழன்று கொண்டிருக்கும்
தீ...போல!

காமமில்லா காதலன்
பொய்யன்.!

அலங்கரிப்பதும்,
ஆசை ஆசையாய் பேசுவதும்,
கைகோர்த்து விரல் பின்னுவதும்,
தோளில் முகம் தோய்ப்பதும்,
பரிவுகள் தோன்றுவதும்,
பரிசுகள் வழங்குவதும்,
கட்டிப் பிடிப்பதும்,
முத்தமிடுவதும்
காதலின் படி வழியாக
காமத்துக்குச் செல்லும் வழியன்றோ....!

காதல் பொய்யாகலாம்,
காமம் மெய்யானது...!

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (27-Aug-15, 9:58 pm)
பார்வை : 120

மேலே