என் பகலான பொழுதுகள்

பகலிலேயே
இருள்கள் சூழ்ந்து கொள்கின்றன
விழிகள்
அயலும் மெல்லிய நொடிகளில்
காற்றில்லா ஸ்தானத்தில்
அள்ளி தெளித்து விடுகிறது
விருந்தோம்பல் இலைகளில்
இடம் பிடிக்கும் நீரைப் போல
உடலெங்கும் வியர்வைத்துளிகள்
வெயிலின்
நிலத்தில் நிலைபெற்றவனுக்கு
பனி தேசத்தின் புயலின் வீரியம்
ஒவ்வாமையாகிவிடுவது போல
ஒவ்வாமையாகிவிடுகிறது சகியே
இயற்கை தந்திட்ட
பகலான பொழுதுகள் உன்னால்...........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (27-Aug-15, 9:43 pm)
பார்வை : 113

மேலே