தொலைந்துவிட்ட என் நாட்கள்

நாட்கள் உருண்டோடும் இந்நாட்களில்
என்நாட்கள் எங்கே?
விடுமுறை தினத்திற்கு ஏங்கியே
பள்ளி சென்ற நாட்கள்
என் கால மாற்றத்தில் தொலைந்துவிட்டன....
நண்பர்களுக்காகவே நான் விரும்பி செலவிட்ட
நாட்கள் கைப்பேசியில் கடக்கின்றன......
எந்த உணவகத்திலும் என் நிலாச்சொறின்
சுவை தேட முடியவில்லை......
என் மிதிவண்டி கேட்பாரற்று கிடக்க
என் முதல் மிதிவண்டி பயண
காயத்தை பார்த்து என் நினைவுகளில்
தவிக்கிறேன்......
என் விலைமிகுந்த கைக்கடிகாரத்தில்
என் மகிழ்ச்சியான நாட்களை
தேட முடியவில்லை...
சொவ்மிட்டாய் கைக்கடிகாரம்
நான் எண்ணி பார்க்க முடியா
தூரத்தில் எனை பார்த்து சிரிக்கிறது...
ஊஞ்சலாடிய ஒற்றை ஆலமரம்
கேட்பாரற்று நிற்க என்
கால்களோ பூங்காவை தேடி செல்கிறது.....
மழைக்கால பட்டுபூச்சி எங்கே?
விழாக்கால வானொலி எங்கே?
வானவில் ரசிக்கும் என் நண்பனின்
விரல் எங்கே?
வாசல் கோலமிடும் என்
அக்காவின் பாசம் எங்கே?
பொம்மைக்காக சண்டையிடும்
என் தங்கையின் கைகள் எங்கே?
நான் வீட்டுப்பாடம் எழுதிய
சிலேட்டு எங்கே?
எங்கே என்ற இத்தனை கேள்விகளில்
என் இன்பங்கள் தொலைந்துவிட்ட்டன
என் பண நோட்டுகளில் என்
நாணயங்களை தேட முடியவில்லை
ஏனென்று கேட்காமல் நான்
ரசித்த என் இளமையை மறுமுறை
ஏக்கத்துடன் திரும்பி பார்க்கிறேன்
நான் தொலைத்த என் நாட்களே
மீண்டும் எனை எனக்கு திருப்பி தருவாயா? என்று..