கனவுகளில் மட்டும் நீ

நான் சுவாசிக்கும் காற்றில் எல்லாம்
உன் மூச்சு காற்றை தேடுகின்றேன் ...

நான் போகும் இடமெல்லாம்
உன் விழி தேடுகின்றேன்..

நான் நடக்கும் வீதியில் எல்லாம்
உன் நிழலை தேடுகின்றேன்

கோவிலில் என் தெய்வமாய் உன்னை தேடுகின்றேன்
உடல் மட்டும் கொண்ட என்னிடம்
என் உயிரை தேடுகின்றேன் ...

என் உயிர் கொண்ட உன்னையும் இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன் ... தொடுவானமாய் உன்னை தொடும் ஏக்கத்தில்

என் கண்களில் நீ இருப்பதால் என்னவோ,
என் கனவுகளில் மட்டும் வந்து செல்கிறாய்....

எழுதியவர் : தேவிப்ரிய ஹரிஹரன் (27-Aug-15, 10:09 pm)
பார்வை : 89

மேலே