வடிவமைப்பு

அழகே
உன்னை வடிவமைத்தவன்
யார் ?
பிரம்மனா
காமனா
தேவ சிற்பி
மயனா ?
கவிதா நதி தீரத்திலே
யாருக்காக காத்திருக்கிறாய் ?

உனக்காகத்தான் !

எனக்காகவா ?!!

ஆம்
அவர்கள் என் அழகை
வடிவமைத்தார்கள்
நீ என்னை உன் கவிதை வரிகளில்
வடிவமைத்தால்தான்
நான் அர்த்தமுள்ளவள் ஆவேன்
என்றாள் புன்னகையுடன் ..
நான் எழுதத் துவங்கினேன்

என்ன எழுதினாய் என்று
கேட்கிறீர்களா ?
அது தேவதை ரகசியம்
சொல்வதற்கில்லை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-15, 10:22 pm)
பார்வை : 90

மேலே