நலம் விசாரித்த நயனங்கள் மெல்ல மலர்போல் விரிந்திட

நலம்விசா ரித்த நயனங்கள் மெல்ல
மலர்போல் விரிந்திட மௌனம் கலைந்து
இதழ்ப்புத்த கம்திறந்து இன்கவிதை சொல்லும்
புதுமையெனும் புன்னகை பூத்து

----இரு விகற்ப இன்னிசை வெண்பா

நலம்விசா ரித்த நயனங்கள் மெல்ல
மலர்போல் விரிந்திட அன்பில் -- மலர்த்தேன்
இதழ்ப்புத்த கம்திறந்து இன்கவிதை சொல்லும்
புதுமையெனும் புன்னகை பூத்து

---இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-25, 4:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே