வேண்டுதல்!

உனை,
ஆளாளுக்கு தடவிக்கொடுப்பார்கள்,
ஆசைதீர தின்னக்கொடுப்பார்கள்,
புதுத்துணி சாத்தி
நெற்றியில் பொட்டும் வைப்பார்கள்.
நேர்த்திக்கடன் என
ஊரே பார்த்திருக்க,
குலசாமிக்கு முன் நிறுத்தி
காதிலும் மூக்கிலும் ஏறுமளவுக்கு
மஞ்சத்தண்ணி ஊத்துவார்கள்,
குலசாமி பேர்சொல்லி
உனைத்திங்க
ஒரு கூட்டம் காத்திருக்கு,
உன்னுயிர் உனக்கு வேணுமெனில்,
தயவு செய்து
தலையை மட்டும் குலுக்காதே..!