நலம் நமதே

மாறாத மனிதன்
தேறாத மனிதம்

வாராத ஞானம்
சேராத குணம்

போதாத காலம்
பொல்லாத ஆவல்

தீராத வேட்கை
தீமையில் நாட்டம்

கூறாத உண்மை
கூவாத குரல்கள்

அறியாத வேடங்கள்
புரியாத புதிர்கள்

ஓதாத வேதங்கள்
சீரழியும் உள்ளங்கள்

பேசாத பணங்கள்
தேடுகின்ற மனங்கள்

ஏறுகின்ற வசதி
இறங்குகின்ற தகுதி

நான் என்ற இறுமாப்பில்
நூலாகும் வீராப்பு

இறங்குகின்ற குழியில்
உறங்குன்ற உண்மைகள்

ஏனிந்த ஆசைகள்
வீணாகும் மனிதனுக்கு

கண்ணான வாழ்வெல்லாம்
மண்ணாகும் மாயமாய்

எல்லை இல்லை எல்லை இல்லை
எம்மவரின் ஆசைக்கு

ஆசை களவு காமம் கோபம்
துறந்துவிடு மனிதனே நீ

ஜென்மங்களே ஜென்மங்களே
திருந்திடத்தான் வாழ்ந்திடுங்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Jul-16, 10:56 am)
Tanglish : nalam namathe
பார்வை : 107

மேலே