கடலலைகளின் நினைவலைகள். *************************** வயது போனாலும் அந்த நாள்,/...
கடலலைகளின் நினைவலைகள்.
***************************
வயது போனாலும் அந்த நாள்,/
நினைவு தோன்றுகையில் மனதுக்குள்ளே மகிழ்ச்சி/
மத்தாப்பு போல பூவாய் விரிகிறது/
பசுமை நிறைந்த வயலின் ஓரம்/
பாவை நீயும் பதுமையாய் அமர்ந்திருக்க/
பறந்த வண்டொன்று உன்னிதழில் தேன்குடிக்க/
மெல்லிய இதழும் சிவந்து போனதே/
கைகளால் பட்டென்று தட்டி விட்டு/
கண்களால் நீ எனைப் பார்த்ததின் பொருள்/
'உனக்காக உள்ளதை வண்டு உண்ணலாமோ'
எனக் கேளாமல் கேட்பதாய் இருந்ததே../
கருமேகம் வானில் வட்டமிட..மெதுவாய்/
குளிர் தென்றல் நம்மைச் சுற்றிட/
குயிலொன்று குரலோசை எழுப்பிட..நம்மின்/
கண்கள் சந்தித்து தலைசாய்த்துக் கொண்டதே/
மனதின் எண்ணங்கள் இருவருக்கும் ஒன்றாய்/
மலர்கிறது மாறாமல் மனதின் இடையே/
துடிக்கும் இதயச் சப்தங்களுக்கு நடுவே/
நம் கரங்கள் பற்றிக் கொள்கின்றனவே./
நீ யார் என்பதை நான் மறந்து/
நான் யார் என்பதை நீயும் மறந்து/
இருக்கும் இடம் அறவே மறந்து../
என்னுள் நீயாக உன்னுள் நானாக/
மாறத் துடித்த அந்த நேரத்தில்/
மின்னல் வெட்டியதே இடியும் இடித்ததே/
கூடவே மழையும் வந்து சேர/
வெப்பமான மேனி நனைந்து குளிர்ந்ததே/
வெட்கத்தில் உன் முகம் சிவக்க./
புன்முறுவல் என் முகத்தில் இழையோட../
நனையாது இருக்க குடை பிடிக்க/
தோள் மீது சாய்ந்த நம் காதல்/
முத்தங்களின் சப்தத்தில் துவளாமல் தொடர்ந்ததே /
*****************