எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு__ எப்போ சுதந்தரம் வாழத்தான் பிறந்தாட்சி வலியோடு ஏன்?...

தலைப்பு__
  எப்போ சுதந்தரம்

வாழத்தான் பிறந்தாட்சி
வலியோடு ஏன்? 
இந்த வறுமைகாட்சி??? 

ஓசியிலே சோறு போட யாரும் இல்லை
பக்கத்திலே உக்காந்து பேசி அனைக்க நாதியும் இல்லை❌???? 

நீ தேடும் சொந்தமோ
நெடுதொலைவு போயாட்சி???? 

சுகம் தரும் சுழலும்
சுற்றி சுற்றி மாற்றி அமைச்சாட்சி??? 

அருள் தரும்
 அன்பனையே!! (God) 
இடம் மாறி இடம் தேடி ஓடவச்சாட்சி????? 
 
எதிர்பார்த்த ஆற்றலும் 
அடிமையாக யாருக்கோ கோவணமாட்சி??? 

உங்களுக்காக எட்டி எட்டி உதைக்கும் கூட்டமடா நாங்கள்
எங்களுக்கோ இறங்க மறுக்குது ஏணோ!!!! 

பாட்டாளிகளாய் வாழும் கூட்டம் நாங்கள்!!!! 

ஏணோ? 
எங்கள் ஏட்டு படிப்பை எட்டி உதைக்கும் கூட்டமாய் மாறியது நீங்கள்?? 

பகுத்தறிவு கருத்தை சொல்ல இங்கே இன்னும் யாரும் பிறக்கவில்லை?? 
 பாவி பய  கூட்டம் 
கல்ல  நம்பி நம்பி கருத்தே போயாட்சி?? 

ஆணி வேராய் படர்ந்த கூட்டமொன்று  அடிமையாகி அமிழ்ந்தே  போகுதய்யா ?? 
அதிகார குரலை எண்ணி எண்ணி!! 

போராடும்  தன்னிலை மறந்தாட்சி 
தனிமை எனும் நோய் வந்து அதிகநாட்கள்  நீண்டாட்சி??? 

இரவு தூக்கம் கலைந்து போயாட்சி 
வணக்கம் சொல்லி சொல்லி கைகள் இரண்டும் வளைந்தே வடுவாட்சி?? 

ஓவ்வொரு பிஞ்சும் பொதிகளை சுமக்குதடி 
பொருமையாய் புலன்களுக்குள் போதனைகள் செல்லாமல் 
எம் இனத்தை போதையிலே  ஆழ்த்துதடி ??? 

எங்களை நாங்களே 
மறைத்து ஒளித்து வாழ பழகியாட்சி ?? 
மாற்றம் வரும் சொல் எங்கே என்று இங்கேயே தேடுது எங்கள் மனசாட்சி??? 


கூடி வாழ தேடுது இங்கே நடக்கும் அவலகாட்சியால்
ஒழித்து கட்ட ஓலமிடுது இங்கே நடக்கும் மறையாட்சியால் (வேதம்) 

இன்பம் தொட்டால் எதிரிகளாட்சி! 
துன்பம் மட்டுமே அன்யோன்யமாட்சி!! 

அருவியில் மீன்கள் தீண்ட 
குருவிகள் ஓலமிட்டு சாட்சிகளாட்சி?? 
 
படிப்பும் பாதியிலேயே பிஞ்சுகளை  நிறுத்தியாட்சி
இங்கே
பாசாங்கு காட்டும் வேலைகள் எல்லாம் நியாயத்தோடு நடந்தேரியாட்சி??

காகித படிமங்கள் ஆங்காங்கே படிந்தாட்சி
எம் கைகளில் சில்லறைகளோ தேடி வர  ரொம்ப நாளாட்ச்சி?? 


சுகங்கள் என்னோடு வாழ திமிராட்சி 
அமைதி எங்கே என இறுக்கம் பதில் கூற மறுத்தாட்சி??? 
வாழ்த்துகளும் எனை அண்ட தீண்டாமையாட்சி
தீர்வுகள் தீருமே என்று நிர்கதியாய் நின்னாட்சி?? 

வாழையாய் தலைத்தோங்க  மூன்று குட்டிகள் போட்டாச்சி 
முச்சந்தியிலே நான் மட்டும் (புன்னை) வழை மரமாய்
வழக்காட வலியோடு வம்பிழுத்தாட்சி?? 

நான் இருப்பது எல்லோரும் மறந்தாட்சி
காலை பொழுது என்னுள் இருந்து தூர 
மறைந்தே போயாட்சி?? 

கதர் வேடமிட்டு சுதந்திரம் மீட்டாச்சி
துரோகம் வேஷம் போட்டு நடுவிலே எங்களையும் கெடுத்தாட்சி
உடைகள் ஏதும் இல்லாமல் கோவணத்தோடு சுற்றி வர நீங்கள் மட்டுமே சாட்சியாச்சி????
 
பாதி பகலை கல்லை எண்ணியே ஏமாந்தே போயாட்சி
ஏமாற்றமே மீதி பகலிலும் மிஞ்சியாட்ச்சி?? 

எமக்காக வழக்காட வந்தவனெல்லாம் 
கொலு(சு) சத்தத்தினாலும்
கொடியவனின் உண்டியல் சத்த்தினாலும் குழைந்து குழைந்தே போனானே!!!

நான் செய்யும் கல்லோ
அதில் உறங்கும் மண்ணையோ அரும்பொருள் என்று நினைத்து வாழ்ந்தேனே!!! 

நான் அயர்ந்து ரொம்ப நாளாச்சி
நாட்களும் நீண்டு கொண்டே அடிமை என்ற பெயரும் பரவியாச்சி!!! 

பொழுதையும் நீட்டிகொள்ள 
இயற்கையாகவே சமிக்கைகள் உங்களுக்குள் வந்தாட்ச்சி???? 

எம்!! 
கதையை கேட்க எந்த நாசி துளைக்கும் அளவுகள் 
மாறி மாறி ஏணோ குறைஞ்சாட்சி

ஓவ்வொரு முழக்கமாய் அங்காங்கே வந்தாட்ச்சி
எதிர்வினை ஆற்ற வரும் வார்த்தைகளோ கடுமையாட்சி
இனி இருப்போம் ஓர் உயிராய் 
ஒதுங்கட்டும் அவண் நாடித்துடிப்புகள் 
உறங்கட்டும் எதிர்வினை கண்கள்

முடியும் வரை போராடி வீழ்வோம் 
இல்லையேல்
ஓவ்வொருவராய் வீழ்ந்து விதையாய்  முளைப்போம்!

நியாயங்கள் ஓவ்வொரு வீதியிலும் 
விதியென மாறட்டும் 
நிம்மதிகள் யாருக்கும் லாபம் இல்லாமல் 
தரநாணயத்தோடு தரபடட்டும்??? 
 
கொத்தடிமைகளோ?? 
சுயமாய் உறங்க முன்வரட்டும்

வியர்வைகள் வேதனைகள் இல்லாமல் வெளியே சிந்தட்டும்......

பதிவு : கலையரசன்
நாள் : 31-Jul-20, 5:08 pm

மேலே