எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊரோரம் காத்திருக்கேன்! **************************** ஊரோரம் காத்திருக்கேன் உனக்காகக் கண்ணே,...



ஊரோரம் காத்திருக்கேன்!
****************************
ஊரோரம் காத்திருக்கேன் உனக்காகக் கண்ணே,
ஓடோடி வந்திடு எனக்காகப் பெண்ணே,
நிலவு காத்திருக்கு நமக்காகக் கண்ணே,
பொழுது விடியுமுன் வருவாயே பெண்ணே!

நீ வருவாயென பூக்கள் காத்திருக்கு,
வரும் வழியெங்கும் நட்சத்திரம் பூத்திருக்கு,
உன் முகம் காணவே நிலவும் காத்திருக்கு,
ஆதவன் வருமுன்னே அவசரமாய் வந்திடு !

மேகம் வந்து பஞ்சனை போடுது,
மோகம் வந்து தட்டி எழுப்புது,
வேகம் கொண்டே நேரம் ஓடுது,
தாகம் தீர்க்கவே விரைவாய்வா கண்ணே!

தனிமையிலே தவிக்கிறேன் ஏக்கத்திலே துடிக்கிறேன்,
புரியாமலே புலம்புறேன் வரும்வழியைப் பார்க்குறேன்,
இமை மூடினால் வெளிச்சமாய் நீயிருக்க,
நித்திரையின்றி தவிக்கிறேன் நினைவாலே வாடுறேன்,

ஊருசனம் தூங்கியாச்சு சாமக்கோழியும் கூவியாச்சு,
கூவும் குயிலும் சோடியுடன் சேர்ந்தாச்சு,
காலையிலே காராப்பசு கத்தும்  முன்னே,
காக்க வைக்காமல் காதலுடன் வா கண்ணே!
*************

பதிவு : முபாலு
நாள் : 1-Aug-20, 12:10 am

மேலே