ஜன்னல்.

ஜன்னலை திறக்க முயன்றேன்,
முடியவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஆணிகளால் இறுக்கப்பட்டு...!

குரல் கொடுத்தேன்..
"யார் செய்த வேலையிது?"
"அடுத்த வீட்டு ஜன்னலை
என்னால் மூட முடியாதே"
சகதர்மினியின் குரல்.
அமைதியானேன்.

'அடி போடி
இருக்கவே இருக்கு
மொட்டைமாடி.
நிலா வராமலா போகும்!'

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (9-Jul-16, 12:30 pm)
Tanglish : jannal
பார்வை : 206

மேலே