கல்லறை வாசகம் --முஹம்மத் ஸர்பான்

தொண்டு தொட்டு மிருகத்தின்
தோள்கள் விலை போன
உலகத்தின் சந்தையில் மனிதனின்
தோள்களும் இன்று விலையாகிறது,

கறுப்புத்தோள்கள் இரையாகிறது
ஆபிரிக்க வெண்மை வானிலையில்...,
அங்கு பசியின் வேதம் சுவாசமாகி
பலரை அழித்து சிலர் வாழ்கின்றனர்.

கீழைத்தேயம் மேலைத்தேயம் எங்கும்
வெள்ளைத்தோள்களின் கேள்வி
காமமெனும் அறைக்குள் இச்சைகள் அடங்கி
முகவரியற்ற தெருவில் உயிர்கள் விழுகிறது.

பசி எனும் நோயை மனிதனாய்
பிறந்த அனைவரும் உணர்ந்திருப்பான்.
ஆனால் அந்த பசியின் பாதையில்
உயிர்கள் இரையாகிப் போவதில் நியாயமுண்டோ?

இந்த உலகம் பல மனித சிலந்திகள்
வாழும் கறைபடிந்த இருண்மையின் காடு
அடுத்தவன் கஷ்டத்திலும் மற்றவன்
ஆனந்தம் கொண்டு கல்லறை வாசகம் எழுதுகிறான்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Jul-16, 2:30 pm)
பார்வை : 94

மேலே