காதல் வரலாறு
விண்ணிலிருந்து மண்ணில் விழுந்து
குதித்து எழுந்து புதையும் மழையே...!
மண் எனக்கும் மழை உனக்கும்
இடையில் ஓர் காதல் வரலாறு
இருப்பதை இன்று யார் அறிவார்?!
வெளியில் நின்று பார்பவர்களுக்கு
வெறும் ஒட்டடைதான் காதல்...
அன்பு சிந்தும் சிலந்திக்கு மட்டும்தான் தெரியும்
அந்த வசந்த மாளிகையின் மகிமை!