முரண்பாடு
அவள் வீட்டின் வாசற்கதவு
திறந்திருந்த பொழுது ...
அவளின் மனக்கதவும்
திறந்திருந்தால் என்னவென
ஏங்கியது என் மனம்
அவள் மனக்கதவு இன்று
திறந்திருக்கும் வேளையில்
அவளது இல்லக்கதவு
திறந்திருந்தால் என்னவென
ஏங்குவதும் என் மனம்தான்!
ஒரு ஆணுக்கு சபலம் தோன்றினால்
ஒரு பெண்ணைக் கெடுக்கும்!
ஒரு பெண்ணுக்கு சபலம் உண்டானால்
அவள் குடும்பத்தையே பாதிக்கும்!
ஏன் இந்த முரண்பாடு?!
அறிவற்ற சமுகத்தாலா?
ஆண் ஆதிக்க சமுகத்தாலா?