தடம் புரளாதே

வேஷம் போடும் கூட்டம்தான்
கூடிப்போச்சு இந்நாட்டில்தான்

போட்டி நிறைந்த ஜப்பான் நாட்டோடு
பொறாமை மிகுந்த மனிதனை
சேர்த்து வைத்தால் என்னவாகும்?
அந்த சம்மந்தம் களைந்து போகும்!

இன்றைய மனித வாழ்க்கை
அக்கரையில் ஒரு காலும்
இக்கரையில் ஒரு காலும்
விரித்து வைத்துக் கொண்டு
பயணத்தை மேற்கொண்டால்
அடைய முடியுமா எல்லைக் கோடு?

ஒரு கணம் தடம் புரண்டால்
மறுகணம் மரணம்தான்!
உன் குணம் மாறிவிட்டால்
குரங்கு கையில் பூமாலைதான் !

எழுதியவர் : கிச்சாபாரதி (8-Jul-16, 10:01 pm)
பார்வை : 133

மேலே