பற்ற வைக்கும் பார்வை

இள(வ)ம் பஞ்சு நெஞ்சை
கொளுத்தும் பார்வையால்
பற்ற வைக்கும் பாவையே
பற்றற்று தனி நீ நிக்கிறாயே!
இன்பம் தரும் காதலை
எனக்குள் விதைத்து விட்டு
அதை அறுவடை செய்யாமல்
இன்னும் இருக்கிறாயே!
கண்டும் காணாமல் இருப்பது
பெண்களின் இயல்பு...
பெண் காணவிட்டாலும்
அவள் பின்னால் திரிவது
ஆண்களின் மகிழ்வு!