காதல் கிறுக்கன்
என்னை தவறு செய்யத் தூண்டுதே -ஆசை!
என்னிளம் நெஞ்சில்
ஆசை அலை தோன்றக் காரணம்
வெண் நிலவைப் போன்ற எழில் பாவை!
அழகே !
தினம் உன் மீது வைத்தேன்
என்னிரு கண்ணே!
அது காதலாய் மலர்ந்ததேன்
என் நெஞ்சுக்குள்ளே?!
உன்னிளம் உடல் மீது
நான் கொண்ட ஆசை
என் உணர்வைத் தூண்டி
காமுகனாய் மாற்றலாகுமோ? என்னை!
அடடா அழகுதான் பெண்மை!
இளம் உடலெங்கும்
எழில் செயற்கை வண்ணம் பூசி
காணும் ஆண் கண்களையெல்லாம்
தினம் மயக்குவது ஏனோ?
புது ஏட்டைக் கண்டால்
எழுதுகோளினை எடுத்து - கவிஞனாய்
அவன் எழுதிக் கிறுக்கத்தானோ!
உன் பின்னால் பலர் திரிவதேன் ? கிறுக்கனாய்...
ஜாடை காட்டி பேசும் -கண்ணே!
மெளன விரதம் மேற்கொள்வதேன்?
தினமும் என் முன்னே!
காதல் கிறுக்கனாய்
என்னை ஆக்கத்தானே!