எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செவலக்காளை ரெண்டு பூட்டி. *********************************** ஆண்: வாடாமல்லி சேலைகட்டி...

செவலக்காளை ரெண்டு பூட்டி.
***********************************
ஆண்:
வாடாமல்லி சேலைகட்டி 
வரப்புமேலே போற புள்ள,
செவலக்காளை ரெண்டு பூட்டி..நாளை,
சந்தைக்கு நானும் போறேன்..
வேண்டியது நீயும் கேளு
விருப்பத்துடன் வாங்கி வாரேன்!

பெண்:
வெள்ளை வேட்டியிலே 
வீரனாட்டம் நிக்கிறவரே,
விருப்பந்தான் சொல்லி விட,!

நீ முறை மாமனும் இல்ல
முன்னே பின்னே பார்த்ததும் இல்ல,
வினை வந்து சேருமுன்னு
அச்சம் வந்து சேருதய்யா!

ஆண்:
கண்டாங்கி சேலை கட்டி,
கனகாம்பரம் பூவும் வச்சு,
கண்ணுக்கு அழகாத்தான் தெரியுறயே,
கண்ணால ஆசையத்தான் சொல்லுறியே,
எம் மனசுக்குள்ள பூவாய் பூக்குறியே,

ஆவணி வந்தாலே அச்சாரம் போடுறேன்,
அக்கம் பக்கம் வாயைத்தான் மூடுறேன் .!

பெண்:
பேசிப் பேசி மயக்குறியே..
பெண் மனதைக் கெடுக்குறியே,
பக்கம் வந்து பேசத்தானே
வெட்கம் வந்து தடுக்குதைய்யா.
பாக்கு வெத்தலை மாத்தி விடு
பருசமும் போட்டு விடு,
ஊருலகம் என்ன சொன்னாலென்ன..
உன்கூட நான் வாரேன்!

ஆண்:
மனசுக்குள்ள உன்னை நினைச்சாச்சு,
மனைவி நீதான்னு விதச்சாச்சு,
விரும்பியதை வாங்கி வாரேன்
விருப்பத்துடன் பெற்றுக் கொள்ளடி.
*************************










பதிவு : முபாலு
நாள் : 3-Aug-20, 11:45 pm

மேலே