எதிர்பார்ப்பு..!

வெட்டி எறிகிறார்கள்
மனதையும்
மரத்தையும்!

வெறிச்சோடி கிடக்கிறது
ஊட்டி வளர்த்த காதலும்- நீர்
ஊற்றி வளர்த்த மரமும்!

வேர்களையாவது
விட்டு வையுங்கள்,
வருங்கால
வாழ்க்கைக்கும்
வனத்திற்கும்!

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (9-Jul-16, 11:21 am)
பார்வை : 162

மேலே