அலைகளின் தாகம்•••
அலைகளின் தாகம் அது
தாகமில்லை நிலத்தின் மீதுள்ள மோகம் !
மூன்று பாகத்தை நீரால் தாம் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதுவே!
எஞ்சிய ஒரு பாகமே நிலம் அதையும் ஆக்ரமித்துக் கொண்டிடவே!
கரையேறி வாழும் உயிரினத்தை ஒன்று விடாது கொன்று விட்டால் ஒழிய !
கரையறுத்து ஓயாமல்
இதோ வருகிறேன் பார் வந்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்று
தம் மிரட்டலை தூதுவிட்டு
போராட்டம் செய்திடும்
அலைகளின் தாகம் தீராது !
பாதையினை பார்த்து தூரத்தை கணிக்க கால்கள் ஊர் சென்று அடையுமோ!
மலைகளில் பனிக்கட்டிகள் உருகாது,
கார்மேகம் உருவாகாமல் மழையாய் பெய்திடாது, நதிகள் நிரம்பியோடுமோ!
வழியில் வயல் வெளி
தாகம் தீர்ந்திடாது நதிகள்
கடலைப் போய்ச்சேருமோ !
தன்னலங் கருதுவதிலேயே
குறிக்கோளாய் இருந்திடும்
வாழ்க்கை நிலைத்திடுமோ !
படைத்தவன் இட்ட கட்டளையை மீறி அலைகளால் ஒன்றும் செய்திட முடியாது என்பது அதற்கே தெறியாதிருக்க ஞாயமில்லை