மழை

...மழை
காற்றில் அடித்து வந்த கார்மேகம்
கட்டி அமைத்த மேடைதனில்
கண் பறிக்கும் மின்னல் ஒளியாகி
செவி பிளக்கும் இடியும் தாளமாகி
கல் மழையும் ஜதியோடு நடனமாட
உள் பயத்தில் கண்மூடி உடல் நடுங்க
உண்டான வியர்வையில் உறக்கம் கலைத்ததம்மா
உருவாகிய இடிமழை இயலாமையை உணர்த்தியதம்மா
உள் மனதில் உறுதி தோன்ற உருவாக்கியவனை மனம் நாடியதம்மா

எழுதியவர் : கே என் ராம் (11-Jul-16, 3:13 am)
Tanglish : mazhai
பார்வை : 381

மேலே