காதல்
பார்வையால் நெஞ்சத்தைக் கிள்ளிவிட்டாய்
அதில் இன்பரசங்கள் அத்தனையும் கலந்துவிட்டு
உச்சிமுதல் உள்ளங்கால்கள்வரை உன்னையே
என் மனதில் நிறுத்திவிட்டு கண்ணைத்திறந்தாலும்
உன்னைக் காணவிட்டு கண்களை மூடினாலும்
என் மனதின் திரையில் உன்னை ஆடவிட்டுஇப்படியே
என்னுள் நீங்காமல் நீ பதிந்துவிட்டாய் பாவையே
நீயோ இன்னும் மௌனத்தில் காலத்தை கடத்தி நின்றால்
உந்தன் காதலன் என் நெஞ்சம் தாங்காதடி அது
தூள் தூளாய் வெடித்திடும் முன்னே வந்திடு பெண்ணே
என்னை அணைத்து நம் காதல் வளர்ந்திட
காலமெல்லாம் உயர் இன்பம் காணலாமே