குற்றாலம் போவோமா
குற்றாலம் போவோமா
வகை வகையாய் அருவி உண்டு
வருட காத்திருக்கும் தென்றல் உண்டு
நிம்மதியாய் குளித்திடவே தனிவரிசை வசதி உண்டு
குற்றாலம் சென்றாலே குளிர்காற்று கூட வரும்
சாரலில் நடந்தாலே குதூகலம் கூட வரும்
உள்ளங்காலு குளிர்ச்சியிலே உடம்பெல்லாம்
சிலிர்த்து விடும்
அருவிக்கரை பக்கம் போனாலே அடிமனதில்
நடுக்கம் வரும்
இடித்து பிடித்து உள்ளே போனாலே
இடிபோல் அடியும் தலையில் விழும்
வெளியில் வரவும் மனமின்றி
வீட்டுக்கு செல்லும் நினைவின்றி
மணிக்கணக்காய் அருவியில் குளித்தாலும்
மனதின் ஆசை அடங்கிடுமா
வாளியில் குளித்த உடலுக்கு
அருவி குளியல் அலுத்திடுமா
குளித்து முடித்து வெளியில் வந்தால்
சூடாய் வடைபஜ்ஜி அழைத்திடுமே
சுட சுட சுக்கு காபி வண்டி தான்
சுத்தி சுத்தி வந்திடுமே
குட்டி கடைகள் சூழ உண்டு
குழந்தைகள் கெஞ்சல் கூட உண்டு
முறுக்கு சுத்தும் அச்சு தான்
முப்பது வருஷமாய் அங்குண்டு
அருவா கத்தி கிடைத்திடுமே
அடுப்படி மசாலாவும் கிடைத்திடுமே
பருத்தி துண்டு கிடைத்திடுமே
குற்றாலம் துண்டுனு பேர் கொண்டு
மலிவாய் எல்லாம் கிடைத்திடுமே
மலையின் சிறப்பை சொல்லிடுமே
ஈரக்காற்றில் முடி பறக்க
தூறல் சற்றே முத்தமிட
சொந்த பந்தம் உடனிருக்க
கேலி கிண்டல் நிறைந்திருக்க
குற்றாலம் தான் போவோமா
குளிச்சுட்டு தான் வருவோமா.......