இதயத்தில் காதல் பேன்

ஒன்னு சொல்லவா
என்றுதான் எப்போதும் கேட்பாய்
அந்த ஒன்றாய் இருக்குமோ
ஆவலில் துதிப்பேன் ....
சீ....துடிப்பேன்
நீ ஜாவா ப்ரோகிராம்மை
காட்டி அறுப்பாய் ...
எனக்கு தெரியும்
உன் சம்பளம் என்னவென்று
நீ வாங்கவிருக்கும்
கார் பற்றியும்கூட
நீ வாங்கி வைத்திருக்கும்
3BHK வீடு கூட
எல்லாம் தெரிந்த எனக்கு
தெரியவேயில்லை
உன் காதலை சொல்லபோகும்
நாள் பற்றி...

எழுதியவர் : மாலினி (12-Jun-18, 10:46 am)
பார்வை : 88

மேலே