தலைப்பை கவின் சொல்வார்

நீயின்றி நானென்ற நாடகம் அது
பூவின்றி நீரற்ற தாடகம்.
சொல்லென்று நான் நின்று வேக
தள்ளென்று நீ கொன்று போக
விடமூட்டி சென்றாயடி தோழி நான்
திடமின்றி வீழ்ந்தேனடி பாவி.
கேளென்று கைபற்றி நோக்க நீ
வேலென்ற விழிவழியே தாக்க
பொய்யென்று போனேனடி அழுது என்
மெய் தின்று வீழ்ந்ததடி பொழுது.
வென்றுவர உடனிருந்த உன் ஆவி இனி
மென்று எனை நீ தீர்த்தாய் போடி.
உயிரோடு நானில்லை இன்று என்
உறவோடு நீயில்லை என்றும்
அரவோடும் நாணுறங்கி போவேன் மெல்
இரவோடும் கனவென்றும் ஆவேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (21-Jun-18, 5:45 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 72

மேலே