அசைவக் காதலி

அவள் ஒரு அசைவப் பிரியை
ஆடு
கோழி
மீன்
இறால்
என அனைத்தையும்
பற்களால்
மென்றவள்
என்னை மட்டும்
பார்வையால்
தின்றுவிட்டாள்

மற்றவையெல்லாம்
தொண்டை வழியாக
வயிற்றுக்குள் சென்றது
நான் மட்டும்
கண்களின் வழியாக
இதயத்திற்குள் இறங்கினேன்.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (21-Jun-18, 5:30 pm)
பார்வை : 228

மேலே