வெற்றிட ஆராய்ச்சி
ஒன்றும் இல்லை
என்று
நெடுநேர ஆராய்ச்சிக்கு
பின் தெரிந்துகொண்டவுடன்
என்னை அங்கு
புகுத்திக்கொண்டேன்
என் மணித்துளிகளை
மென்றுகொண்டிருந்தது
அந்த வெற்றிடம்
விரிசல் வெடிப்பில்
என்னுடைய 'நான்'
முளைக்கத்தொடங்கியது
மீண்டும் வெற்றிடமானது
ஆராய்ச்சி .....