அனாதை

ஆதரவற்றவர்களுக்காக துணி வாங்க வருபவர்களின் நிலை :

ஆசிரமத்தில் வேலை பார்ப்பவன் [வீடு வீடாக துணி வாங்குவது]. ஒரு வீட்டிற்கு பழைய துணி வாங்கப் போறான்.ஒரு வீட்டு கேட்டு தட்டி கூப்பிடுரான்.

வீட்டுக்குள்ள இருந்து ஒரு சத்தம் [lady] என்ன வேனும்.இவன் இந்த மாறி அனாதை ஆசிரமத்திலிருந்து வரேன்.பழைய துணி இருந்தா குடுங்கனு கேக்குறான்.அவ இல்ல இல்லனு சொல்ரா,இவன் அவள ஒரு மாரி பாத்துட்டு தலை குனிஞ்சர்ரான். அடுத்த வீட்டுக்குப் போறான்.

அப்ப பழைய பேப்பர் துணி வாங்கரவன் வரான்[அவன் பாசைல கூவிட்டு]அந்த lady கதவ திறந்து இருங்கனு சொல்லிட்டு பழைய துணி எடுத்துட்டு வந்து இவங்க கிட்ட போடுரா.இத (ஆசி) பாத்துக்கிட்டே இருக்கிறான்.
அவ போட்டுட்டு காச வாங்கிட்டு திரும்பி பாக்குறா அவன் பாக்குறத.இவ ஒரு மாறி குற்ற உணர்ச்சியோட பாக்குறா.அந்த பேப்பர் காரர் சைக்கில தள்ளிட்டு வந்து 2 துணி அவன்கிட்ட குடுக்கிறான்.அப்ப lady தலை குனிஞ்சு நிப்பா..

" சோகத்தை சொர்க்கமாக்கி
வாழுற எனக்கு
சொந்தமிருந்தும்
சொல்லிக்க யாருமில்லை,
அன்னையிருந்தும்
அன்பிற்காக ஏங்குகிறேன்,
தந்தையிருந்தும்
பசிதாகத்தில தவிக்கிறேன்,
அன்னை இல்லத்தில பிறந்தேன்-
இப்ப அனாதை
இல்லத்தில இருக்கிறேன்,
புத்தாடை உடுத்தியதில்லை
ஒருவன் உடுத்திய
ஆடை உடுத்தியிருக்கிறேன்,
நான் அனாதை என்றால்
கடவுளும் அனாதையே
நீ அழாதையே "............
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (19-Dec-17, 8:38 am)
Tanglish : anaadhai
பார்வை : 316

மேலே