உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி10

" வேதம் என்றால் என்னவென்று இந்த சபையில் யாருக்குமே தெரியாதா? ", என்று கோபமாகக் கொப்பளித்தார் சிவனார்.

" ஒருவர் இருக்கிறார் சுவாமி. ஆனால், அவர் இச்சபைக்கு வரவில்லை. ", என்று திருமால் சொல்லிட,
சிவன் யாரென்று பார்த்தார்.
அங்கு எமன் மட்டும் வரவில்லை.

கண்களை மூடி எமனை நினைத்தார்.
எமன் அங்கு தோன்றினார்.

" வேதம் என்றால் என்ன? தெளிவான விளக்கம் சொல்லுங்கள். ", என்றிட, புன்னகைத்த எமன், " என்னுடைய ஆன்மாவும், மனமும் ஆனந்தமடையும் கடமை எதுவோ அதுவே என் வேதம். ",என்றார் எமன்..

" புரியவில்லை. சற்று விலக்கிக் கூறுங்கள். ", என்று சிவனார் செப்பிட, " விதி முடிந்த உயிர்களைக் கவர்ந்து வருவதும், பாவக்கணக்கைப் பார்த்துத் தண்டிப்பதும் என் கடமை. அதைச் சரியாக நான் செய்யாவிடில் எனக்கு நிம்மதியில்லை. என் வாழ்வே நரகத்தில் புதையும். ஆதலால், எனது கடமையே எனது வேதம். அகிலத்தின் நிலைப்பிற்காகப் பணியாற்றுகிறேன் என் ஆன்மாவும், மனமும் மகிழ.. ", என்றார் எமன்..

" சரியான விளக்கம். ", என்ற சிவனார், " எமன் சொன்னது போல் நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை உணர்ந்து அவற்றை வேதமாகப் பாவிக்க வேண்டும். அதுவே அகிலத்திற்கு நன்மை தரும். ", என்றார் சிவனார்.

கதையைக் கூறி முடித்த பெரியவர் ஜெகனின் முகத்தைப் பார்த்தார்.
சற்று தெளிவடைந்திருந்தது.

மேலும் தொடர்ந்த பெரியவர், " மனிதர்களில் பேராசை எண்ணங்களின் ஆதிக்கமே அதிகம்.
கோவிலைக் கட்டுபவன் உண்மையான அன்பு கொண்டு கட்டுவதில்லை.
கோவில் சென்று பூசிப்பவனிடமும் உண்மையான அன்பு இல்லை.
எல்லா பொருட்களும் போலிகளாக இங்கே மனிதர்களும் போலிகள் தான். ", என்றார்.

" இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்? ", என்று ஜெகன் கேட்டார்.

" மனிதன் தன் வேதம் அறியத் தவறியதே காரணம். கொடிக்கணக்கான சட்டங்கள் சட்டப்புத்தகத்திலே எழுதி வைத்திருக்கிறான்.
ஆனாலும், தவறுகளைத் தடுக்க முடியவில்லை.
நாகரீகம் தலைகீழாக வளர்கிறது.
ஒன்றை புரிந்து கொள். உன்
இன்பமும், துன்பமும் உன்னிடம் இருந்தே பிறக்கிறது. பிறரிடம் அல்ல. ", என்றார் அந்த பெரியவர்.

" அப்படியெனில் என் கடமையைச் சரியாகச் செய்வதே எனக்கு ஆனந்தம் தரும் என்கிறீர்களா? "

" ஆம். நிச்சயமாக. ஆனந்தமாய் வாழ்வதற்கு அது ஒன்றே வேதம். ", என்றார் அந்த பெரியவர்.

ஜெகனின் சந்தேகங்கள் அழிந்தன.
முகங்களில் சந்தோஷம் பொங்கி வழிய அவர்களுக்கு விடை கொடுத்தார் பெரியவர்.

அதன் பிறகு ஜெகன் தன் கடமையில் மேலும் சிரத்தையோடு ஈடுபட்டார்.
வீதிகளிலோ, பேரூந்து நிலையங்களிலோ யாராவது கையேந்தினால் அவர்களை தன்னுடன் அழைத்து வந்துவிடுவார்.

அவர்களுக்காக அன்பு இல்லம் என்ற ஒன்றைக் கட்டி வைத்தார்.
பாதை மாறிய இளைஞர்கள் மனம் திருந்த பக்கமாக இருந்தார்.

தமிழ்செல்வன் தன் தந்தையைப் பிரதிபலித்தான்.
தமிழ்செல்வி தன் தாயைப் பிரதிபலித்தாள்.

அந்தப் பெரியவர் சொன்னது போலவே தமிழ்செல்வி ஆசிரியாரானாள்.
தமிழ்செல்வன் காவல்துறையில் சேர்ந்தான்.

நூறு பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் எந்த பெருமையும் இல்லை.
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாலும் அதை சிறப்புற பண்புற அன்புற வளர்ப்பதிலே இருக்கிறது உண்மையான பெருமை...

அவர்களின் குடும்பம் மற்ற குடும்பத்திற்கு முன்மாதிரியாக அமைந்தது.

பலரும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்த ஜெகனும் ஜெனிபரும் ஆனந்தமாக வாழ்கிறார்கள்.
சமீபத்தில் தமிழ்செல்வனின் திருமணமும், தமிழ்செல்வியின் திருமணமும் நடந்தேறியது.

அவர்களுடைய திருமணங்களும் காதல் திருமணங்களே..
அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்க, அன்பு வாழும் பெரிய குடும்பமானது.

உண்மையான காதல் பிரிவதில்லை.
அது கடைசி வரை வாழ்கிறது.
உண்மையாக காதல் மாறுவதில்லை.
அது கடைசி வரை நேசிக்கிறது.

இரு மனங்களின் இணைப்பே உண்மையான காதல்.
அன்பிற்கு மதிப்புக் கொடுப்பதே உண்மையான காதல்..

அங்கு ஏமாற்றங்கள் இல்லை.
தியாகங்கள் இருக்கும்.
ஆனந்தம் பொங்கும்.

வாழ்க உண்மையான காதல்.
வாழ்க உண்மையான காதலர்கள்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Dec-17, 9:44 pm)
பார்வை : 343

மேலே