பட்டம் போல சட்டம்
பதுமை அரசு கொண்ட
பைத்திய நாட்டில் -
புதுமை ஆயிரம் புதுப்பிக்காவிட்டாலும்,
தன்னை பித்தன் என்று பொய் கூறி
பணம் பார்க்கும் பிணமோ
அரசியல்வாதி,
பதவி,பாவம் இதை தவிர இவனிடம்
சட்டம் ஒன்றும் இல்லை..........
ஆயிரம் வாய்தா தரலாம்
ஆனால், ஒரு வழக்கு கூட
முடியக்கூடாது என
கண்ணை மூடிக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடும்,
நீதி தேவதை,
முடியாத ஆயிரம்
வழக்குகள்,வாய்தா
இதை தவிர
சட்டம் ஒன்றும் இல்லை...........
அவன் செய்வான்
இவன் செய்வான்-
என்று ஜோதிடம் பார்க்கும்
பொய் ஜோதிடன் தான்
மனிதன்
எதிர்பார்ப்பும்,ஏக்கமும்
தவிர இவனிடம்
சட்டம் ஒன்றும் இல்லை......
சட்டம் என்பது
நூல் முனையில் தொங்கி பறக்கும்
பட்டம் போல,
யார் வேணுமானாலும்
விளையாடலாம்..........
காற்று அடிக்கும் திசையை நோக்கி
பட்டம் பறக்கும்,
பணம் அடிக்கும் திசையை நோக்கி
சட்டம் பறக்கும்..........
- கௌரி சங்கர்