என் வாழ்த்துக்கள்

அடுத்த 365 நாட்கள் யாவும் வெண்மை நிரம்பப்பட்ட
புது அத்தியாயம்
அவற்றில் நாளை முதலே
பல வண்ணங்கள் குடிபுகட்டும்
புது மலர்கள் பூக்கட்டும்
தாய் தந்தை மேன்மை விளங்கட்டும்
''தான்''என்ற அகங்காரம் விலகட்டும்
''நாம்'' என்ற உயிர்மெய் நிலை நிலைபெறட்டும்
அன்பும் அரவணைப்பும் கிடைக்கட்டும்
கோபமும் காதலும் நித்தமும் நிகழட்டும்
நட்பும் புது நண்பர்களும் மாமலையென உயரட்டும்
துரோகமும் பகைமையும் அடியோடு அழியட்டும்
அமைதியும் சிறு கிறுக்கு மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் நினைவுகள் கனவுகளாக மாறட்டும்
கைபேசி நிழல் குறையட்டும்
முகம் குடுத்து பேசும் நிஜம் கூடட்டும்
தோல்வி கொஞ்சமும் வெற்றி போதாமலும் உம்இதயத்தை தாக்கட்டும்
தூய்மை அரசியல் வரட்டும்
நல்ல மருத்துவமே துரத்தட்டும்
சகோதரத்துவம் நிலையோங்கட்டும்
சத்தியமே வாழட்டும்
என் தமிழும் தன் இடத்தை பெறட்டும் !!தலை நிமிரட்டும்!!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018
அன்புடன்
-கிருஷ் அரி

எழுதியவர் : கிருஷ் அரி (31-Dec-17, 9:13 pm)
சேர்த்தது : கிருஷ் அரி
Tanglish : en vaalthukkal
பார்வை : 95

மேலே