ஆன்மிக அரசியல்
ஆன்மாவை நிராகரித்தவன் உடல் இச்சைகளில் மயக்குண்டு கொக்கரிக்கிறான் ஆன்மிகமென்றால் மதவாதமென்று..
குருடனிடம் சூரிய உதயம் பற்றி பேசவே இயலாது.
அவன் காணும் ஒரே நிறம் எல்லாம் கருப்பென்று.
அடுத்தவர் மீது அதிகாரம் செய்வதெல்லாம் இருக்கட்டும்,
உன்னை நீ அறிந்தாயா?
என் பாட்டன், முப்பாட்டன் எல்லாருமே தமிழ்நாட்டில் பிறந்தவர்களாததால் நான் தமிழன்டா என்று நீ கொக்கரிக்கும் வார்த்தைகளே போதும்,
நீ வடிகட்டுன முட்டாளென்பதை எடுத்துக்காட்ட...
பாட்டனும், முப்பாட்டனும் விபச்சாரம் செய்திருந்தால் அதையே உன் இனப்பெருமை என்று அறியாமையில் இருக்கும் நீ நிச்சயம் பறைசாற்றுவாய்...
நாங்கள் சாதி சாக்கடைக்குள் கிடக்கிறோம்.
எங்களுக்கு மதச் சாக்கடை எதற்கு?
என்பதாய் கூவும் சேவல்களே!
பெரியாரின் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்குத் தகுதியில்லை...
குற்றம் பிறந்த வேரைப் பிடித்துக் கொண்டு நானும் தமிழன், நானும் தமிழன், இது பெரியார் பூமி என்று வெளி வேஷமிடும் விளம்பரப் பேச்சுகளை வேறு யாரிடமாவது போய் சொல்லுங்கள்.
என்னிடம் வேண்டாம்..
கோயில் உண்டியல் பணம் மட்டும் வேண்டும்,
அதற்குக் காரணமான இந்து மதம் வேண்டாம் என்பது அறிவிலியின் வாதமே...
இப்படியும் உங்கள் காலம் கழியுதே!