பிரிவு

எங்கோ நீயிருக்க...
ஏனோ அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்...
நீ எப்படி இருக்கிறாய் என்று....??

உன்னருகில் நானிருப்பதாய்..
உணர்வுகளில் சேர்ந்திருப்பதாய்...
ஒவ்வொரு நிமிடமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

உறக்கமில்லா என் கண்கள்....
உன் பெயரை உச்சரிக்கும்
என் இதழ்கள்....
உயிர் பிரியும் வேதனையை
உணர்வாயா நீ......?

என்றாவது எனை நினைப்பாயா
நித்திரையில் என் நினைவை
சுமப்பாயா.....
நானறியேன்....
ஆனாலும்
உன் நினைவுகள்
எனக்குள் சுமையாய் அல்ல
சுகமாய் இனிக்கிறது
என்றென்றும்.....

எழுதியவர் : நிஷா (1-Jan-18, 5:05 pm)
Tanglish : pirivu
பார்வை : 158

மேலே