உன்னை காணாமல் இருந்திருக்கலாம்- 2 என்ன செய்ய

உன்னை காணாமல் இருந்திருக்கலாம்
பார்த்து விட்டேன் என்ன செய்ய

என்னை தொலைக்காமல் இருந்திருக்கலாம்
தொலைத்து விட்டேன் என்ன செய்ய

உன்னை ரசிக்காமல் இருந்திருக்கலாம்
ரசிகனாகிவிட்டேன் என்ன செய்ய

உன்னை நேசிக்காமல் இருந்திருக்கலாம்
சுவாசித்துவிட்டேன் என்ன செய்ய

உன்னை தரிசிக்காமல் இருந்திருக்கலாம்
பக்தனாகி விட்டேன் என்ன செய்ய

என்னை இழக்காமல் இருந்திருக்கலாம்
இழந்துவிட்டேன் என்ன செய்ய

உன்னைத் தேடாமல் இருந்திருக்கலாம்
தேடும்விழிகளை என்ன செய்ய
என்னை மீறாமல் இருந்திருக்கலாம் இப்போது
அழும்விழிகளை என்ன செய்ய

உன்னை நாடாமல் இருந்திருக்கலாம்
நாடும்மனதை என்ன செய்ய
என்னை மீறாமல் இருந்திருக்கலாம் இப்போது
வாடும்மனதை என்ன செய்ய

உன்னிடம் ஓடாமல் இருந்திருக்கலாம்
குதித்தோடியமனதை என்ன செய்ய
எல்லை மீறாமல் இருந்திருக்கலாம் இப்போது
குருதியோடும்மனதை என்ன செய்ய

உன்னிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம்
சொல்லிவிட்டேன் என்ன செய்ய
என்னை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்
கொட்டித்தீர்த்துவிட்டேன் என்ன செய்ய
வெட்கி நாணாமல்
வெட்டி எரிந்துவிட்டாயடி

உன்னைக் கேட்காமல் இருந்திருக்கலாம்
கேட்டுவிட்டேன் என்ன செய்ய
என்னைக் கேட்காமல் பேசியிருந்திருக்கும்
உதடுகள் ஆசையில் என்ன செய்ய

உன் சொல் கேட்காத என் காதல்
இறக்காமல் வாழ்கிறது
என் சொல் கேட்டும் கேட்காமல்
தினம் வளர்க்கிறது
உன் நினைவுகளை சிந்தையில்
தினம் அழுகிறது
உன் நினைவுகளில் சிதைந்து
தினம் சிரிக்கிறது
உன் நினைவுகளில் சிலிர்த்து

காதல் பைத்தியக்காரத்தனம்
காதலித்தவன் பைத்தியம் என்றால்
காதலிக்க செய்த நீ யாரடி ...?

கோபமாய் இப்படி
எத்தனை முறை
என்னறிவு கேட்டாலும்
அத்தனை முறையும்
வெட்கமற்று எட்டிப்பார்க்குது
நீ இன்னமும் இருக்கும் என் மனசு
என்னவளை என்ன சொல்கிறாயடா என ....!!!!

எழுதியவர் : யாழினி வளன் (30-Aug-17, 3:12 am)
Tanglish : yenna seiya
பார்வை : 939

மேலே