வான்மேக தோழியே வருவாயா கொஞ்சம்

வான்மேக தோழியே
வருவாயா கொஞ்சம்
வாசலிலே காத்திருந்து
வாடுகிறதே நெஞ்சம்

மண் மேல் கொண்ட காதலே
மறந்து நீயும் போனாயா
மனதில் கொஞ்சம் ஈரம் சுரந்து
மழையே நீயும் வருவாயா

உன் ஒரு துளி படவே
என் தேகம் ஏங்கி கிடக்கு
ஆர்பரிக்கும் என் மனதை
அமைதி படுத்துவாயா..!

உன்மேல் கொண்ட அன்பினால்
உன்னை போலவே உருகின்றேன்
விண்ணில் இருந்தது போதும்
விரைந்து நீயும் விழுந்துவிடு..!

காடுகளே அழித்த பாவத்திற்கு
கடுங்கோபம் உனக்கிருக்கும்
கண்ணீரோடு மன்னிப்பு கேட்கிறேன்
கடமை உணர்ந்து வந்துவிடு..!

காய்ந்த வயல் போல நானும்
காத்திருக்கிறேன் நாளும்
காலம் தாழ்தியது போதும்
கருணையாக பொழிந்துவிடு..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (30-Aug-17, 3:13 am)
பார்வை : 1922

மேலே