அழைத்து வந்து சேர்த்திருக்கும்
என் விழிசிந்தும்
கண்ணீர்துளிகளுக்கு
ஒருவேளை
கால் முளைத்தால்
கட்டாயம் அவை
கட்டெறும்பாய் வரிசை
கோர்த்து வந்திருக்கும்
உன் காலடிகளுக்கு..
நனைத்தேனும் அல்லது
கடித்தேனும் உன்னை
அழைத்து வந்து
சேர்த்திருக்கும் என்னிடம் ....