இது தான் காதலா

சில நினைவுகளோடு
பேசிக் கொண்டிருப்பேன்
அடிக்கடி....
என்னையும் மீறி
அழகான உன் பெயரை
ஆயிரம் முறை உச்சரிக்கும்
என் உதடுகள்...
இதுதான் காதலா.....?


உன்னைப் பார்க்கும் நிமிடங்களில்
உற்சாகம் உடல்முழுக்க மின்சாரமாய்
உதடுகளில் புன்னகையாய்....
உளறித் தொலைப்பேன்
எதைப் பேச என்று தெரியாமல்...
இதுதான் காதலா....?

நீ இல்லாத நேரங்களில்..
ஏனோ ஒரு வெறுமை
எனைச் சுற்றி வட்டமிடும்..
வார்த்தைகள் முட்டிக் கொள்ளும்.
கண்ணீர் தொண்டைக்குள்
முள்ளாய் குத்தும்....
இதுதான் காதலா....?

எழுதியவர் : நிஷா (6-Jan-18, 11:09 pm)
பார்வை : 296

மேலே