எப்படி இருக்கிறாய்

எப்படி இருக்கிறாய். .......நீ

உனது ஒவ்வொரு நினைவுகளும்
உனது ஒவ்வொரு அசைவுகளும்
எனக்குள் .....
பரிச்சயம் ஆனது எப்படி?

தென்றலோடு மட்டுமே
பயணப்பட்ட தினங்களாய்....
உன் நினைவுகள் எனக்குள்
தித்திக்கிறதே........

முட்கள் மறந்து போன மலராய்
நான் மகிழ்ந்து போன
நிமிடங்கள் எனக்குள்
சிலிர்க்கிறதே....

சூர்யோதயம் தேடிடும்
சிறு பறவையாய்
சுற்றிய நாட்கள்..
சுகமாய் இனிக்கிறதே....

ஆனால் இன்று....
முட்டிக் கொள்ளும்
வான் மேகம் கொட்டிச் சென்ற
மழைத்துளிகளாய். என்
கண்ணீர்த்துளிகள்....உன்
உன்னதப் பரிசாய் எனக்குள்ளே....


இரவு பெய்த மழையின்
ஈரத்துளிகளாய்...
கண்ணீரை பரிசளித்து....
நீ போனதெங்கே என்னுயிரே......

எழுதியவர் : நிஷா (8-Sep-17, 11:58 pm)
Tanglish : yeppati irukirai
பார்வை : 403

மேலே