நல்ல வேளை

நிழல்கொடுக்கும் ஆலமரம்,
நிம்மதியாய்ப் படுத்திடலாம்
அதன் அடியில்,
கவலையின்றித் தூங்கிடலாம்..

காரணம்,
காய் சிறிது-
காயம்படாது விழுந்தால்..

கடவுளுக்கு நன்றி சொல்வோம்,
காயதனைப் பெரிதாய்
பரங்கிக்காய் போலப்
படைக்காமல் விட்டதனால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Sep-17, 7:17 am)
பார்வை : 77

மேலே