விழிகளின் விண்ணப்பம்

வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....

காலத்தின் கட்டாயம்
கண்ணீரில் நம் சுவாசம்....

என்றோ ஒருநாள்..
கண்ணீர் தாளாமல்...
உன்னிடம் பெற்ற கைக்குட்டை
விரலோடு விமர்சித்துக் கொண்டிருக்கிறது....

வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....


சில நிமிட இடைவெளியில்...
சிந்திக்க விடாமல்...
சிதறும் கண்ணீர்முத்துக்கள்...
நம் அன்பின் காணிக்கையாய்...
கைக்குட்டையை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது....
அன்பிற்கான அதீத அடையாளமாய்...

வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....


நட்பென்றும் காதலென்றும்
அன்பின் பரிணாமம் இருந்தாலும்..
உணர்வென்னவோ ஒன்றுதான்...
எது எதுவாக இருந்தாலும்...
இடைவெளியின் வலி என்னவோ
இதயத்தை ஆக்ரமித்துக் கொண்டேதானிருக்கிறது....

வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....

எழுதியவர் : நிஷா (1-Jan-18, 7:41 pm)
பார்வை : 600

மேலே