போக்குவரத்து விதி மீறல் தமிழகத்திலும், பிரிட்டனிலும் ஓர் ஒப்பீடு - 4

சூழல் 11:

இங்கிலாந்தில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் முறையாகப் பயிற்சி
எடுத்தபின்பே ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும்.

இன்று எனது ஊருக்கு அருகிலுள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்த, மதுரையிலிருந்த,
தற்சமயம் லண்டனில் பணியாற்றும் டாக்டர் நண்பர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
அப்பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவருடன் பணிபுரிந்து, லண்டனில்
கார் ஓட்டிய அவரது டாக்டர் நண்பரின் அனுபவத்தைச் சொன்னார்.

BUS LANE ல் வாரநாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை, பிற வாகனங்கள்
செல்லக்கூடாது. சனி, ஞாயிறு நாட்களில் போகலாம் என்றும் இருந்திருக்கிறது.
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சனிக்கிழமையும் செல்லக்கூடாது
என்று அறிவித்திருக்கிறார்கள்.

வாரம் தவறாமல் சனி, ஞாயிறுகளில் மனைவியுடன் Brighton என்ற இடத்திலிருந்து
Southall சென்று கடைகளில் பொருட்களை வாங்கித் திரும்புவார். உரிமம் வாங்கி
இரண்டு வருடங்களாக கார் ஒட்டி வந்த நண்பர் பெரும்பாலும் சனிக்கிழமைகளில்
shopping சென்று வரும் பொழுது அவர் BUS LANE லேயே வருவதுண்டு.

ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சனிக்கிழமையும் BUS LANE செல்லக்கூடாது என்று
அறிவித்ததை அறியாமல் அடுத்தடுத்து BUS LANE லேயே காரை ஓட்டி வீட்டிற்கு
வந்து விட்டார். அடுத்த இரண்டு நாளில் civic enforcement பிரிவிலிருந்து நோட்டிஸ்
வந்து விட்டது.

ஏழு இடங்களில் BUS LANE ல் வந்ததாகவும், 7 x 60 = 420 பவுண்டுகள் அபராதம்
கட்ட வேண்டுமென்றும், 21 நாட்களுக்குள் கட்டினால் 210 பவுண்டுகள் மட்டும்
போதுமென்றும் இருந்தது.

மேலும் பெனால்டி 9 பாய்ண்டுகளாக லைசன்சில் குறிக்கப்படும் என்றிருந்தது.
மனம் நொந்துபோய் அபராதத்தையும் கட்டிவிட்டு, ஒரு வருடம் காரை எடுக்காமல்
ரயிலிலேயே பணிக்கும், பலசரக்குக்கும் சென்று வந்தாராம், அந்தோ பாவம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-14, 5:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 426

சிறந்த கட்டுரைகள்

மேலே